தனிமனித சீர்திருத்தமே சமுதாயத்தின் சீர்திருத்தம்
இஸ்லாம் ஒரு மனிதன் புறத்தோற்றத்திலும் அகத்தோற்றத்திலும் தூய்மையாகவும் சிறந்த பண்புகளுடன் விளங்கவும் வலியுறுத்துகிறது. ஒரு மனிதன் எல்லாச் செயல்களையும் இறை திருப்தியை நாடி மட்டுமே செய்ய வேண்டும்.உலக ஆதாயம், புகழ், பாராட்டு ஆகியவற்றை நாடாமல் மனத்தூய்மையுடன் செயல்படுவதே உண்மையான சீர்திருத்தத்தின் முதல் படி ஆகும். இதில் ஆன்மீகம் முக்கிய பங்கு வகுக்கிறது.பொறாமை, பேராசை, பெருமை, கர்வம், கோபம், வெறுப்பு, கபடம் போன்ற அக நோய்களிலிருந்து உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி மாற்றாக பணிவு, தாராள குணம், அன்பு போன்ற நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திகிறது.ஒருவேளை பாவம் செய்துவிட்டால் பிறகு உடனடியாக மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கோரி, அந்தப் பாவத்தை மீண்டும் செய்யமாட்டேன் என்று உறுதியான முடிவெடுப்பது சீர்திருத்தத்தின் முக்கிய அம்சமாக இஸ்லாம் போதிக்கிறது. தனிமனிதச் சீர்திருத்தம் நன்னடத்தை என்பது ஆன்மீக வழிபாடுகளுடன் முடிவடைவதில்லை. அது ஒருவரது அன்றாட நடத்தையிலும் பிரதிபலிக்க வேண்டும். பேசுவதிலும், ஒப்பந்தங்களிலும் உண்மையாக இருப்பது. புறம் பேசுதல் கோள் சொல்லுதல் வீண் பேச்சு ...