சமூகத்தில் ஊறிப்போன மூட நம்பிக்கைகளும் வீண் சடங்குகளும்.
ஒருவர் செய்வதை காரணம் புரியாமல் அர்த்தமும் தெரியாமல் தானும் கடைபிடிக்கும் செயலே மூடநம்பிக்கை. superstitious எனப்படும் இந்த மூட நம்பிக்கை காலம் காலமாக மனிதர்களிடயே உலவிகொண்டுதான் இருக்கிறது.இயல்பாகவே மனிதன் கண்ணால் பார்க்க முடியாத விஷயங்களை கற்பனை செய்வதில் வல்லமை திறன் கொண்டவன். ஆதலால் இந்த மூடநம்பிக்கைகளின் சுவை அவனை நடைமுறை உண்மகளிலிருந்து ஏமாற்றிகொள்ள உதவுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. மற்றவரை ஏமாற்றவும் தன்னை தானே ஏமாற்றிகொள்ளவும்,சமூக பொறுப்புகளில் மேலோங்கவும்,அடி பாதாலத்ததிற்கு செல்லவும்,சில நேரங்களில் இந்த மூடநம்பிக்கை மனிதத்தன்மையற்ற குற்றங்கள்,கொலைகள் செய்யும் எல்லைக்கு வரை கொண்டு சென்று விடுகிறது.உதாரணத்திற்கு சமீபத்தில் நடந்த நரபலிகள்.உண்மையை சொல்லப்போனால் எல்லா மனிதர்களுக்கும் இயலாமை வரும்போது மட்டும் இனம்,மொழி,சாதி,மதம் கடந்து மூட நம்பிக்கை எனும் வழித்துணை சாதனம் தேவைப்படுகிறது.அது தாயத்தாகவோ,வண்ணக் கயிறுகளாகவோ, ஓலைச்சுவடிளில் உள்ள உளவியல் பொது கருத்தாகவோ வடிவெடுத்து விடுகிறது.இப்படியான மூட நம்பிக்கைகளை வேரறுத்த இஸ்லாமிய சமூகத்திலும் இது போன்ற நடைமுறைகளை பின்பற்ற கூடிய சில மக்கள் உள்ளனர்."சகுனம் பார்பபது இணை வைப்பாகும்".என்று நபி(ஸல்) மூன்று முறை கூறினார்கள்.இறைமையின் மீது அவநம்பிக்கை கொள்ளாதே என இஸ்லாம் கூறுகிறது.படைத்த இறைவனின் ஞானத்தை குறைத்து மதிப்பிடும் போது தான் இது போன்ற குறுகிய மனப்பான்மை வருகிறது.மனித சமூகத்தின் மூடநம்பிக்கை பற்றி விவரம் புரியாத விலங்குகளையும், பறவைகளையும் கூட மனிதர்கள் விட்டு வைப்பதில்லை.பெண் காகம் கத்தினால் வீட்டுக்கு விருந்தாளி வருவார்கள். ஆண் காகம் கத்தினால் இழவு செய்தி வரும் என்று கூறி அதன் பசியையோ,உணர்வயோ சடங்காக்கி விடும் புத்திசாலிகளாக நாம் இருக்கிறோம்.கதவை ஆட்டாதே, தாழ்பாளை ஆட்டாதே,வீட்டில் சண்டை வரும் என்று விளையாடும் போது குழந்தைகளை மூட நம்பிக்கையின் பக்கம் சிறு வயதிலிருந்தே பழக்கிவிடுகிறோம்.உண்மை என்னவென்றால் தீவிர சிந்தனையில் நாம் இருக்கும்போது இது போன்ற சப்தங்களை நாம் விரும்புவதில்லை என்பதுதான் நிதர்சனம்.இதில் சாஸ்திரம் எங்கிருந்து வந்தது?!நல்ல நேரம் , கெட்ட நேரம் என்று காலத்தை பிரிப்பது குறை சொல்வது போன்ற பேச்சுக்களால் வளரும் தலைமுறையை பயிற்றுவித்து அவர்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டு சோம்பேறிகளாக்கி விடுகிறோம். இப்படிபட்டவர்களால் கால மாற்றத்துக்கேற்ப ஈடு கொடுக்க முடியாமல் போய்விடுகிறது.நாம் சாதிப்பதற்கு ஒன்றுமறியாத கடிகாரத்தின் மூன்று முட்கள் தான் காரணம் என்று சொல்வதால் அது தன் கடமையை நிறுத்திகொல்வதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.தேங்காய் சிரட்டையில் டீ குடித்து,கண்ணாடி குவளைகளுக்கு மாறி இன்று பேப்பர் குவளையை பொது விழாக்களில் பயன்படுத்தும் நம் கண்டுபிடிப்புகளில் கூட மூட நம்பிக்கைகளின் வன்மம் புதிய வடிவெடுத்து கொண்டுதான் இருக்கிறது.இன்றைய மக்களை சமயம் எது,மூட நம்பிக்கை எது என்று அறியாமல் குழப்பும் துணை சாதனமாக சில திரைப்படங்களும்,தொலைகாட்சி தொடர்களும் இருக்கின்றன.இதை எல்லாம் நம்பும் மக்களால் கால நேரத்தை சரிசெய்து தருகிறோம் என்று ஜாதிக்கல் நகைகளை விற்கும் விற்பன்னர்கள் அதிகமாகி வருகின்றனர்.வேலை வாய்ப்பு இல்லாத இளைய தலைமுறையினர் இது போன்ற ஊன்றுகோலை நம்பி செல்வது அதிகரித்து வருகிறது.பெயரை மாற்றி கொண்டால் அதிர்ஷ்டம் வரும்.ஆரம்ப எழுத்தை பெயருக்கு பின்னால் போட்டால் வசீகரமாக இருக்கும்.அதன் மூலம் அதிர்ஷ்டம் வரும் என்று பல மூட நம்பிக்கையால் தோற்று போகின்றனர்.காலை கண் விழித்த உடனே நம்முடைய நாளின் நிகழ்வுகளை யாரோ ஒருவர் தீர்மானித்து பேசுவதை ஆர்வமாக கேட்கிறோம்.அவர் கூறியது நிராசை ஆகிவிட்டால் பொய் என்போம்,நடந்துவிட்டால் மெய் என்போம்.வெற்றியை விரும்பும் ஒவ்வொரு மனிதனும் மெய்யாகவே தனக்கு சாதகமான நடப்புகளைத்தான் விரும்புவான்.அதை அறிந்து கொண்டதால் தான் அதற்கு சாதகம்(ஜாதகம்) என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்பதை அறிவு பூர்வமாக நாம் உணர்ந்திருக்க வேண்டும்.ஆறாவது பெண் பிறந்தால் அரசனும் ஆண்டியாவான்.என்று வாய்க்கு வந்ததை சரளி வரிசையில் சொல்லிவிட்டு போக கூடியவர்களும் உண்டு.இப்படிப்பட்ட மூட வார்த்தைகளும்,செயல்பாடுகளும் ஒருவரின் தன்னம்பிக்கையை உளவியல் ரீதியாக குறைத்துவிடும் என்பதால் தான் 'உள்ளுவதெல்லம் உயர்வுள்ளல்' என்றொரு பதில் வாக்கியம் பிறந்தது போலும். இது போன்ற மூட பழக்க வழக்கங்கள் சமூக பிளவுகளையும் ஏற்படுத்தி விடுகிறது. பெண்களை துகிலுறுவதின் வக்கிர சிந்தனைக்கு வரம்பில்லாமல் போய்விட்டது.மடமையை பின்பற்றுவதில் உச்ச பட்ச்சமாக அதிக மழையை நிறுத்தவேண்டி பெண்களை நிர்வாண ஊர்வலம் நடத்துவது. இப்படிபட்ட கொடுமைகளால் தான் மழை கூட பொழியாமல் நின்று விடுகிறது என்று இந்த விஞ்ஞானிகளுக்கு தெரியவதில்லை.மட்டுமல்லாமல் வருமானத்தின் பெரும்பகுதி வீண் விரய செலவுகளாகி போகிறது.வெவ்வேறு நடமுறைகளை பின்பற்றி செலவு செய்தாலும் முழுமையான தீர்வுகள் கிடைக்காமல் வாழ்வில் நிம்மதி இழந்து சிலர் அடையாளம் தெரியாமல் கூட போய் விடுகிறார்கள்.சிலர் நாம் தோற்று போய்விட்டோம் என்று ஒப்புக்கொள்ள மனமில்லாமல் நேரத்தின் மீது பழி போடுகிறார்கள்.மனிதன் சற்று முன்னேறி சென்று ,என் அட்மின் செய்த தவறு எனக்கு தெரியாது என மழுப்பும் மனப்பான்மை போன்றாகிவிட்டது.மூட நம்பிக்கைகளை களைய அவ்வப்போது சமூகத்தில் மூட நம்பிக்கைகளுக்கெதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்த தலைவர்களும்,மக்களுக்காக சமூக தொண்டாற்றியவர்களும் தெய்வமாக கொண்டாடப்படுதையும் பார்க்கிறோம்.இறந்த பின் அவர்களது அடக்கஸ்தலங்கள் வணக்க வழிபாட்டுக்குரிய இடங்களாக சிலர் மாற்றிவிடுகின்றனர்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக, அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்தால், அவர்கள் அவரது கல்லறையின் மீது ஒரு வழிபாட்டுத் தலத்தைக் கட்டி அதில் உருவங்களைச் செதுக்குவார்கள்.அவர்கள் அந்நாளில் அல்லாஹ்விடம் மிகவும் கெட்டவர்களாக இருப்பார்கள்.(ஆதாரம்:ஸஹிஹ் அல்-புகாரி 427.) இவ்வாறு பகுத்தறிவை மழுங்கடிக்கும் மூட பழக்க வழக்கங்கள் தனி மனிதனை மட்டுமல்லாது,சமூகத்திலும் சச்சரவுகளை உருவாக்கி சமூக நீதியை குலைத்து விடுகிறது.சில மாவட்டங்களில் உள்ள இஸ்லாமிய மக்கள் திருமணத்தின் போது மஞ்சள் கயிற்றில் தங்க குண்டு கோர்த்து தம்பதி சகிதமாக வாழும் வயதான பெண் மூலம் மணப்பெண்ணின் கழுத்தில் கட்டிவிடுவார்கள்.இதை 40 நாள் கழட்ட கூடாது என்ற சம்பிரதாயம் வேறு.
புது மாப்பிள்ளையை பெண் வீட்டுக்கு வரவேற்க மாமியாரின் பட்டு புடவையை விரித்து அதன் மேல் புது மாப்பிள்ளையை நடந்து வர செய்வது.
புது மண பெண் 40 நாள் தொழ கூடாது.அடுக்களை பொருட்களை தொட கூடாது.கட்டிடங்கள் அஸ்திவாரம் அமைப்பதற்கு நல்ல நேரம் பார்ப்பது போன்ற எல்லா மூட நம்பிக்கையிலும் சற்றும் சளைக்ககாத முஸ்லிம் மக்களும் இருக்கிறார்கள்.துன்பத்தை சகித்து கொள்ளும் மனப்பான்மை இல்லாத மக்களால் தான் இப்படிபட்ட மூட கருத்துருவாக்கம் வருகிறது.முதலில் படைத்த இறைவனிடமிருந்துதான் நன்மையும்,தீமையும் நமக்கு வருகிறது என்ற ஆழமான நம்பிக்கை வேண்டும்.இதன் மூலம் இறைவனின் மீது நன்னம்பிக்கை பிறக்கிறது.
நம்முடைய சிந்தனைகளையும்,திட்டங்களையும் முன்னோக்கி பார்த்தால் போதும்.மூட பழக்கவழக்கங்களில் இருந்து விடுபடலாம்.
"ஒன்றை நீங்கள் வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கும். ஒன்றை நீங்கள் விரும்பலாம். அது உங்களுக்குக் கெட்டதாக இருக்கும். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்". அல் குரான்:(2:216).
Comments
Post a Comment