ஈஸா ஒரு இறை தூதரே.
கடவுள் மட்டுமே அழியாதவர்: ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் ஒரே வல்லமையுள்ள, அரசர்களின் ராஜா, மற்றும் பிரபுக்களின் இறைவன்; அழியாத தன்மையை மட்டுமே கொண்டவர், எந்த மனிதனும் அணுக முடியாத ஒளியில் வசிப்பவர், எந்த மனிதனும் பார்த்ததில்லை, பார்க்க முடியாது: அவருக்கு மரியாதையும் வல்லமையும் என்றென்றும் இருக்கும். (1 தீமோ. 6:15-16)
இது பைபிளின் வசனம்.
உலகம் படைக்கபட்டதிலிருந்து ஒரிறை கொள்கையை எடுத்துரைக்க மனிதரில் ஒரு ஒழுக்கசீலரை தேர்ந்தெடுத்து இறைவன் தன்னுடைய தூதராக(நபிமார்கள்) நியமித்து அவ்வப்போது மக்களிடையே துளிர்விடும் பல தெய்வ கொள்கையை களையெடுக்கவும்,வழிகெட்டிலிருந்து மக்களை மீட்டெடுக்கவும் ஓவ்வொரு சமூகங்களுக்கும் அனுப்பினான்.
தந்தை ஆதமின்(ஆதாம்) சந்ததியிலிருந்து பறந்தோடி வரும் ஒரு கிளை தான் நபி ஈசா(இயேசு) அவர்களும். இவர் அராமிக் மொழி பேசும் மனிதராக இருந்தார்.கன்னியாக இருந்த அன்னை மரியம்(மரியாள்) அவர்களின் வயிற்றில் தங்கி பிறந்தார்.
தந்தை ஆதம்(ஆதாம்) எப்படி தாயும் தந்தையும் இல்லாமல் இறைவனால் படைக்கபட்டாரோ அப்படியொரு தனி சிறப்பை பெற்றவர் நபி ஈஸா(அலைஹ்) அவர்கள். இவர் தாயை மட்டுமே பெற்றிருந்தார்.குர்ஆன் இவரை ஈஸா,மஸீஹ் மர்யமின் குமாரர் என்று குறிப்பிடுகிறது.மனித இனத்தில் எல்லோருக்கும் இயற்கை விதித்தது போலவே பால்குடி,தவழுதல்,நடத்தல் போன்ற எல்லா இயல்பான வளர்ச்சியும் அவருக்கு இருந்தது.
கவலை, மகிழ்ச்சி, களைப்பு,வியர்வை, பசி,தூக்கம்,தூய்மை பேணுதல்,ஆடை அணிவது,உணவு உண்பது போன்ற அனைத்து மனித செயல்பாடுகள் கொண்டவராகதான் ஈஸாவும் வாழ்ந்தார்.
ஒரு இறை தூதராக இவர் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பவராக இருந்தார்.
இந்த இறை பணியில் அவரோடு 'ஹவாரியூன்கள்' (அப்போஸ்தலர்கள்) அல்லது சீடர்கள் என்று அழைக்கப்பட்ட தோழர்களும் உதவியாக இருந்தனர்.
ஒவ்வொரு நபிமார்களுக்கும் இறைவன் ஒரு முஃஜிஸா (அற்புதம்) கொடுத்தான்.
உதாரணத்திற்கு நபி மூஸாவின் கைத்தடி கடலை பிளந்து, ஃபிர்அவ்னின் (பாரோன்) செங்கோலை வீழ்த்தியது.
முஹம்மத் நபிக்கு அருளிய இறைவேதமான குரானின் வசனங்கள் மூலமாக அரபுலகமே நீதியின் பக்கம் மீண்டது. இவ்வாறே நபி
ஈஸா (அலை) அவர்களும் அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் அற்புதங்களை நிகழ்த்த முடிந்தது.ஆனால் மக்கள் இந்த அற்புதங்களை மட்டுமே பின்பற்றுகிறார்கள்.
இவருக்கு முன்போ பின்போ அற்புதம் வழங்கப்பட்ட எந்த நபிமார்களும் இறைவனாக கொண்டாடபடவில்லை.தாய் தந்தை இருவருமில்லமல் உருவான தந்தை ஆதம் கூட தேவனின் குமாரர் என்று யாரும் குறிப்பிடுவதில்லை.இறைவனின் குமாரனாக போற்றப்படவில்லை.
பல தெய்வ கொள்கைகளை தடுத்து ஒரிறை கொள்கையை தன் சமூகத்துக்கு எடுத்து சொன்ன எல்லா நபிமார்களும் தங்கள் சமூகத்தாராலும்,ஆட்சியாளர்களின் அடக்குமுறை சூழ்ச்சிகளாலும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
அன்றைய சமூகத்தில் மலிந்து கிடந்த வட்டி,விபச்சாரம்,குறி பார்த்தல்,தான்தோன்றித்தனமான வாழ்க்கை முறை,மது அருந்துதல்,பல தெய்வ கோட்பாடுகள் என அநீதியும் ஒழுக்க கேடும் நிறைந்த சமூகத்தை சீர்திருத்தம் செய்யவும்,
பாவத்திலிருந்து மக்களை மீட்டெடுத்து இறைதூது செய்தியின் மூலம் மக்களின் வாழ்வையும் செயல்களையும் நெறிபடுத்தவே நபி ஈஸா(அலைஹ்)அவர்களும் செயல்பட்டார்கள்.
"இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூருவாயாக. உங்கள் முழு மனதோடும், உங்கள் முழு பலத்தோடும்: இதுவே முதல் கட்டளை. எனவே ஒருவர் இருக்கிறார்; அவரைத் தவிர கடவுள் வேறு யாரும் இல்லை". (மாற்கு 12:29-30 & 32)
முதல் கட்டளையாக இயேசு மக்களுக்கு போதித்ததும் இறைவன் ஒருவனே என்பது தான்.
அன்னை மரியாள் (மர்யம்) அவர்களின் மகன் தான் ஈஸா.அவர் தேவனின் குமாரர் என்று தன்னை எங்கும் சொல்லவில்லை.அவர் தன் வாழ்வில் இறைவனின்(தேவனின்) அடிமையாகவே வாழ்ந்தார்.
அவர் இறைவனின் குமாரராக இருப்பதில் இறைவனுக்கு எந்த தேவையுமில்லை.மனிதனுக்க தான் சந்ததிகளின் தேவை இருக்கிறது. இனப்பெருக்கத்திற்கான தேவை இருக்கிறது.முதுமையிலும்,இறப்பிலும், நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழும்பொதும்,பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கவும் சந்ததிகளின் துணை தேவை படுகிறது.ஒப்பற்ற நித்திய ஜீவனுக்கு (இறைவன்) எந்த தேவையும் யாரிடத்தும் இல்லை.நபி ஈசா அவர்கள் தேவனின் குமாரராக இருந்தால்,நெருக்கடியான சந்தர்பங்களில் தேவனை அழைக்க அவசியமில்லை."என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்". என அவர் அழைக்க வேண்டிய அவசியமில்லை.அவரே அந்த துன்பத்திலிருந்து மீள ஆற்றல் பெற்றவராய் இருந்திருப்பரே!.
எனவே குர்ஆன் அவரை (ஈஸா) மர்யமின் குமாரர் என்றே அழைக்கிறது.
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமத்தினால் பரிசுத்தம்..... (லூக்கா 11:1-2)
இங்கு பிதா,பரிசுத்த ஆவி என்கிற சொல் இந்த திரித்துவக் கொள்கையின் மையப்புள்ளியாக பலப்படுத்த பயன்படுகிறது.பிதா என்ற வார்த்தை படைப்பாளனையும் குறிக்கும்.ஆனால் மொழிபெயர்ப்பு நடையின் வழக்கில் இச்சொல் மக்களின் சிந்தனையை திரித்து விடுகிறது.இன்ஜில் என்பது ஈஸா(இயேசு) நபிக்குக் கொடுக்கப்பட்ட இறைவேதம்.உண்மையை சொல்ல வேண்டுமானால் ஈஸாவுக்கு கிறிஸ்தவத்துக்கும் எந்த பங்கும் இல்லை.அவரை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு பல தெய்வ கொள்கை தான் கிறிஸ்துவம்.சில நேரங்களில் இப்படியான தொன்ம உருவாக்கங்கள் புரிதல் சிக்கல்கயும் தீர்க்க முடியாத சங்கடத்தையும் மக்கள் சிந்தனையில் ஏற்படுத்தி விடுகிறது.இந்த குழப்பம் தீர்ந்து வாய்மை உணர்வதற்கு குர்ஆன் அத்தியாயம் ஆல இம்ரான் மற்றும் அத்தியாயம் மர்யம் இல் தெளிவு கிடைக்கிறது. நந்தனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நிகழ்வில் எப்படி கண்துடைப்பு அரசியல் இருக்கிறதோ,அதே போன்று தான் நபி ஈஸாவை திரித்துவக் கொள்கையில் இணைத்து கிறித்துவம் உருவானதும்."இது பகுத்தறிவை குழப்பி தெய்வீக மாட்சிமை உணர்வை மக்களிடம் தூண்டும் ஒரு கொள்கை". என்று The Anglican journal (Canada) செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.ஹீப்ரூ மொழியில் இருக்கும் பைபிளும்,ஏனைய மொழிகளில் உள்ள பைபிளும் மொழிபெயர்ப்பின் பின்னணியில் மக்களின் புரிதலை திரித்து வைத்திருக்கிறது.முஹம்மது நபி சொல்லாத செய்யாத விஷயங்களை ஒரு சில இஸ்லாமிய மக்கள் ( கர்பலா நாள் துக்க அனுசரிப்பு) கடைபிடிப்பது போன்ற ஒரு கருத்து திரிபு தான் இந்த தேவனின் குமாரர் என்கிற வார்த்தையும்.
முஹம்மது நபிக்கு எப்படி தன் குறைஷி இனத்திலிருந்தே எதிர்ப்பு வலுத்ததோ அப்படித்தான் ஈஸா(அலை) அவர்களுக்கும் அவரின் யூத இனமே எதிரியாக மாறினர்.இந்நிலை நபி நோவா என்கிற நூஹ்(அலைஹ்) அவர்களுக்கும்,நபி லூத் (அலைஹ் )அவர்களுக்கும் நேர்ந்துள்ளது.இவர்கள் அனைவருக்கும் மலக்குகள் மூலம் தூதுசெய்தியும் இறைவன் வழங்கியுள்ளான்.நபி மோசேவுக்கு தவ்ராத்தும்,நபி ஆப்ரஹாமுக்கு ஜபூர் வேதமும் நபி ஈசாவுக்கு(இயேசு) இன்ஜீலும் நபி முஹம்மது க்கு குரானும் வேதங்களாக இறைவனால் வழங்கபட்டது.(அனைவர் மீதும் சாந்தி உண்டாவதாக).இவர்கள் எல்லோருக்கும் மனித சமூகத்தை வழி நடத்த இறைவனின் வழிகாட்டுதல் தேவைபட்டது என்பது இதன் மூலமாக தெளிவாகிறது.இவர்கள் எல்லோரும் ஓரிறை கொள்கையில் ஆணித்தரமாக நிலைத்து நின்றவர்கள்.ஆனால் இவர்கள் யாருக்கும் கிறிஸ்துவம் போன்ற பெயர் கொண்ட தனி வழி மதங்கள் உருவாகவில்லை.
"வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர வேறெதையும் கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் “குன்” (ஆகுக) என்ற அல்லாஹ்வின் வாக்கினால் உண்டானவராக இருக்கின்றார்.அதை அவன்(இறைவன் ) மர்யமின்பால் போட்டான்.எனவே அவரும் அவனிடமிருந்து வந்த ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூவர் என்று கூறாதீர்கள் - இப்படிக் கூறுவதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்; இது உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். காரியங்கள் அனைத்துக்கும் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்". குர்ஆன்: (அந் நிஸா:171)
நபி ஈஸா(அலைஹ்) உயிருடன் இருக்கும், போதே உடல் ரீதியான மரணத்தை அடையாத நிலையில், பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அவர் மீண்டும் மறுமையின் அருகாமை நாளில் மீதமுள்ள தன் தூதுதுவத்தை முழுமைபடுத்துவார்.தாஜ்ஜால் (அந்தி கிறிஸ்து) ஐ வென்று மீண்டும் ஓரிறை கொள்கையை இறைவனின் துணையோடு இப்பூமியில் நிலைநாட்டுவார்.
இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. குர்ஆன்: ஆல இம்ரான்:157.
Comments
Post a Comment